| வந்ததினா லுந்தனுக்கு சாபமப்பா வரைகோடி யுகவருஷம் தந்தோம்காணும் தொந்தமுடன் தான்கொடுத்தார் சித்தரெல்லாம் தொல்லுலகில் போவதற்குயிடமுமில்லை சந்தமுடன் கிருஷ்ணமண்டபத்தினோரம் சாங்கமுடன் தானிருந்தேன் சிலகாலந்தான் கந்தமுடன் பெண்களெல்லாம் நதியோரத்தில் கலந்துமே ஜலக்ரீடை செடீநுயவந்தார்தாமே |