| மாடான சண்டிகளை விட்டுநீங்கி மார்க்கமுடன் குளிகைகொண்டு பார்க்கவந்தேன் காடான வனாந்திரங்கள் குகைகள்கண்டேன் கனமான சித்தரிட மார்க்கம்பார்த்தேன் கோடான கோடிமுறையாவும் பார்த்தேன் குறிப்புடனே பொன்னகரம் கண்டுவந்தேன் சேடான பகவானால் சொல்லலாகா சிறப்பான பொன்னகரங் கண்டேன்தானே |