| தானான ரிஷிகளிட பதாம்புயத்தை சதாகாலம் ரிஷிகள்மேற்றாக்கவேண்டும் கோனான சாபத்திற் கிடங்கொடாமல் குருநிந்தை யணுகாமலிருக்கவேண்டும் மானான சித்தர்முனி தங்களுக்கு பட்சமுடன்மனதுவந்து நடக்கவேண்டும் மானான சாத்திரத்தை யாருக்குந்தான் மானிடரே கொடுத்தாக்கால் தீமையாமே |