| பண்ணவே மையதனையெடுத்துக்கொண்டு பதிவான வுருவுதனை யேற்றியேதான் திண்ணமுட னாஞ்சினேயர் வுருவைமாட்டி திறமுடனே லட்சமுரு போட்டுக்கொண்டு வண்ணமுடன் வலாடமதில் மையைத்தீட்டி மயங்கிடவே லோகமெல்லாம் வசியமாவார் நண்ணமுடன் ராஜாதிராஜர்தாமும் நாட்டிலே சித்தர்களும் வசியமாமே |