| தேடவே யின்னமொரு மார்க்கம்பாரு தெளிவான மையொன்று செப்பக்கேளு நீடயிலே வழுகண்ணி தொழுகண்ணியாகும் நீடான நீர்மேல் நெருப்புமாகும் கூடயிலே பசலையாங் கருபசளையாகும் குறிப்பான வாள்காட்டி னிலையுமாகும் வாடையிலே அழுஞ்சியென்ற மூலியாகும் வகுப்பான கருமூலி இருள்மூலியாமே |