| போக்கவே துஷ்டருடன் கூடவேண்டாம் பொலிவான யுளவையெல்லாங் காட்டவேண்டாம் தூக்கமுடன் சோம்பருடன்கூடி துறைமுறைகள் யாதொன்றும் காட்டவேண்டாம் வாக்கிலுள்ள சித்தர்முனி ரகசியத்தை வளப்பமுடன் விருதாவில் கொட்டவேண்டாம் நோக்கமுடன் தானிருந்து பொருளாராடீநுந்து நொடிக்குள்ளே காயசித்திக் கிடமுந்தேடே |