| பாரேதான் சிலையதுவு மிறுகிக்காட்டும் பாங்கான லிங்கமுடன் துருசுதானும் சீரேதான் கெந்தியுடன் தாரந்தானும் சிறப்பான சூதமுட னிடையாடீநுச் சேர்த்து வேரேதான் மூலியது விராலிதானும் வேகமுடன் தான்பிழிந்துசரக்கைமைந்தா கூரேதான் மைபோலரைத்துபின்பு குணமான மருந்தையெல்லாம் சிலையிற்கேற்றே |