| கரடான வுப்பதனை யெடுத்துக்கொண்டு கருத்துடனே மறுசட்டி கடல்ஜலந்தான் பிரட்டாதே பின்னுமந்த சட்டிக்குள்ளே பெரான கடல்ஜலந்தான் படிரண்டிட்டு வரட்டுடனே வுப்பையெல்லாம் சீவிவாங்கி வளமாக கடல்ஜலத்தில் கரைத்துக்கொண்டு திரட்டுடனே வடிகட்டி யெடுத்துக்கொண்டு தீர்க்கமுடன் வடுப்பேற்றி யெரிப்பாடீநுநேரே |