| செப்பவென்றால் ஜலந்தனிலே வுப்புக்கொட்டி சீலமுடன் தான்கரைத்து தெளிவைவாங்கி ஒப்பமுடன் சீலையது வேடுகட்டி வுத்தமனே வடுப்பேற்றி யெரிப்பாயப்பா தெப்பமுடன் நீரெல்லாம் சுண்டியேதான் தெளிவுபெற வுப்பதுவும் வட்டுப்போலாம் நெப்பமுடன் தானிருக்கும் வுப்பைத்தானும் நேர்ப்பாக சரண்டியதை யெடுத்திடாயே |