| வாங்கியே செம்புநிகர் தங்கஞ்சேர்த்து வரிசையுடன் தானுருக்கி வைத்துக்கொண்டு ஏங்கியே திரியாதே மைந்தாநீதான் இன்பமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று ஓங்கியே தானெடுத்து வுருக்கிப்பாரு வுறுதியாம் மாற்று பனிரண்டதாகும் பாங்குபெற ஜொதிமயந் தன்னைக்காணில் பாலகனே சிவயோகம் பலிக்குந்தானே |