| புதைத்தவுடன் நீரெல்லாம் சுண்டவேதான் பொங்கமுடன் கருநிறமாயிருக்கும்பாரு சிதைத்துமே நாசிதனில் முகந்திட்டாக்கால் திக்காடுஞ் சுவாசமது திணறிக்காட்டும் பதைத்துமே மேனியது சிலிர்ப்புகாணும் படுஞ்சுலுக்கு கஸ்தூரி சொல்லப்போமோ மிதத்துடனே மருந்துகளில் சேர்க்கவேண்டும் மிக்கான போகருட வைப்புதானே |