| மடையறாமானவர்கள் நூலைப்பாரார் மாறாட்டமாகவே கெடுத்தாரென்று நடையான நூல்வழிக ளறியாமற்றான் நாதாக்கள் கைமறைப்பு யார்தான்காண்பர் மடைபோல பேசவல்லார் நூலைப்பாறார் மதிகுலைந்து நினைவழிந்து வறிவுகெட்டு கடையான சாத்திரங்கள் மிகவும்பார்த்து கருத்தெரியா மானிடர்கள் மெத்தவாமே |