| பாண்மையாம் யாகநிலை தவத்தில்நின்று பாங்குபெற சின்மயத்தை பணிந்துபோற்றி கான்மையாம் காலாங்கி தனைநினைத்து கருத்துடனே எப்போதும் கடாட்சிக்கத்தான் மேன்மையுடன் மனோன்மணியை மனதிலெண்ணி மிக்கான சுடரொளியைக் காணவென்று வாண்மைபெற பராபரியை நிலையாராடீநுந்து வாகுடனே சுருதிநிலை நின்றுபோற்றே |