| நூலான வாயிரத்திருநூறு சொன்னேன் நுணுக்கமாஞ் சொச்சங்கள னேகம்சொன்னேன் பாலான வைநூறு கறுகிடையும் சொன்னேன்பாலகனே யெந்நூல்போ லாறுஞ்சொல்லார் சேலான சுருக்கிடையுங் குருக்கிடையுஞ் சொன்னேன் சிறப்பான ஜோதிமுமந்நூறு சொன்னேன் மூலான காலாங்கிநாயர்தம்மை முடிவணங்கி யடியேனும் தொழுதிட்டேனே |