| போமேதான் குக்குடத்தில் கட்டிப்போகும் போக்கான சரக்கதுவும் புகைத்துநிற்கும் நாமேதான் சொன்னபடி பூரக்கட்டை நலமாக மட்டமென்ற பொன்தகட்டில் வேமேதான் வுமிநிரால் தானிழைத்து விருப்பமுடன் தான்தகட்டில்பூசிப்பின்பு காமேதான் காவிக்குள் கீடிநமேலிட்டு கருத்தாக புடம்போடமாற்றமாமே |