| மார்க்கந்தான் புரியஷ்டங் கூத்தேகூத்து கோடிஜென்மமெடுத்து ஆடும் ஏர்க்கவே புரியஷ்டத்தெழுவகைதோற்றம் எங்குமதுவிரிந்தாடப் பிரபஞ்சமாச்சு பார்க்கத்தான் புரியஷ்ட பகவான்கூத்து பண்பாகவிதையறிந்து கூர்ந்துபாரு தீர்க்கந்தான் பார்த்தறிந்த பெரியோர்தாமும் திறந்தோமே தன்னியதில் மேல்நிற்பாரே |