| அரைத்துமே மேருவென்ற குப்பிக்கேற்றி அப்பனே வாலுகையிலெரித்துமேதான் திரைத்துமே குப்பியைத்தான் சிலாகையிட்டுத் திறமுடனே பார்க்கையிலே சிவப்புமெத்த யரைத்துமே செந்தூரப் பதனம்பண்ணு பாங்கான வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று முறைத்துமே தானுருக்கி குருவொன்றீய முதிர்வான மாற்றதுவும் எட்டதாமே |