| தெரியவே பட்சியுட யுபதேசத்தால் தேசத்திலுள்ளதொரு மார்க்கமெல்லாம் புரியவே யெந்தனுக்குக் காண்பித்தேதான் பூலோகம்போவதற்கு விடையுந்தந்து சரியவே கிரியைவிட்டு கீழிறங்கி சாந்தமுடன் வந்துநிற்கும் வேளைதன்னில் உரியவே பொன்பட்சி யொன்றுகண்டேன் வுத்தமனே யதன்பெருமை சொல்லக்கேளே |