| சொல்லவே விடைபெற்று படியிறங்கி சூட்சமுடன் குளிகைதனைபூண்டுகொண்டு மெல்லவே யடிநோக்கித் திரும்பும்போது மேலான ரிஷியொருவ ரங்கிருந்தார் வெல்லவே யாரென்று யென்னைக்கேட்டார் வேகமுடன்றான்பயந்து போகரென்றேன் புல்லவே யேன்வந்தாடீநு குகைதான்மீது பொல்லாத மனுஷர்கள் வரலாகாதே |