| புகழான வஞ்சலியைக் கண்டுயானும் பொங்கமுடன் திரும்பியே மலையிற்சென்றேன் சகழான மண்டபமும் ஓடைகண்டேன் தாக்கான சூரியன் சந்திரனுங்கண்டேன் துகழான முக்கடிகை கண்டேன்யானும் தோற்றவில்லை மறுபடியும் பரிதிபரிதிகாணேன் மிகழான நட்சத்திர மிருபத்தேழு மிக்கவொரு கடிகைதன்னில் கண்டிட்டேனே |