| பார்க்கையிலே சித்தர்முனி ரிஷிகள்தாமும் பாகுடனே யெந்தனையாரென்றுகேட்டார் மேற்கையிலே யிருந்ததொரு சித்தர்தம்மை மேன்மையுடன் றாள்பணிந்து வணக்கஞ்சொன்னேன் கார்க்கவே வேண்டுமென்று காலாங்கிதம்மை கருத்திலே தானினைத்து குளிகைபூண்டு தீர்க்கமுட னென்பேரு போகரென்றேன் திறமையுடன் சித்தர்களு மருள்செடீநுதாரே |