| பாரேதான் மேருகிரி பக்கம்போனேன் பாங்கான சுனையுண்டு குகைதானுண்டு சீரேதான் சித்தரவர் நூறுபேர்கள் சிறப்பாக வங்கிருப்பார் தவயோகத்தில் நேரேதா னவர்கள்முகந்தன்னில் நின்றேன் நிஷ்கரமா யெந்தனையும் நிமிர்ந்துபார்த்தார் சேரேதா னிவ்விடத்தில் வந்ததென்ன சிறியதோர் பாலகனே சொல்லென்றாரே |