| இருந்திட்ட சித்தரென்னை கண்டுவந்து இனிதாக வாடீநுமொழிகள் தாமுரைத்தார் வருந்திட்டு யானுமெனக்கெதியேதென்றேன் வாகான சித்தரவர் பேசவில்லை கருந்திட்ட பதுமையது தன்னைபார்த்து சட்டமுடன் கண்சாடை காட்டினார்பார் மருந்திட்ட பதுமையது யெனையாரென்ன மார்க்கமுடன் நான்பயந்து போகரென்றேன் |