| கொண்டவுட னடியேனுந்தான் பணிந்து குறிப்புடனே காலாங்கிதனைநினைத்து அண்டசராசரங்களெல்லாம் காணவென்று அப்பனே குளிகைதனை பூண்டுகொண்டு கண்டறிய வேண்டுமென்று மேருதன்னில் கருத்துடனே சிகரவரை யேறிவந்தேன் திண்டமுன் பதுமையொன்று யானுங்கண்டேன் திறமான சித்தொருவ ரிருந்திட்டாரே |