| கண்டிட்டேன் வேலவரையடிபணிந்தேன் காலாங்கிநாதரைத் தொழுதுபோற்றி மண்டிட்டு கால்பணிந்து யடிவணங்கி மகாதேவா சரணமென்று தொழுதேன்யானும் தெண்டிட்ட வடியேனை வேலர்பார்த்து தேவரிடம் வந்ததென்ன பாலாவென்றார் விண்டிட்டு யானுமப்போ வரலாறுசொன்னேன் விரும்பியே எந்தனையு மாட்கொண்டாரே |