| கேளேநீ திரவியங்கள் மலைபோற்றங்கம் குவிந்திருக்குஞ் சாவடியாங் குளமொன்றுண்டு சூளேநீ ராட்சதங்கள் கூட்டமப்பா சொல்லவொண்ணா ரிஷிகளுட சேர்வைமெத்த அளேதான் மானிடர்க ளெவர்போனாலும் அண்டவொண்ணாதிரவியத்தை யெடுக்கப்போமோ தாளேதான் மந்திரமாமதர்வணவேதம் தாக்குடனே தானறிந்தோர் போகலாமே |