| கண்டேனே ரிஷிகளுட கூட்டந்தன்னைக் காலாங்கிநாயனார் சமாதிகண்டேன் உண்டான சமாதியிடபக்கந்தன்னில் வுத்தமனே மேருகிரி சமாதியோகம் அண்டாத தடாகமொன்று யங்கேயுண்டு அதிலுள்ள வதிசயங்கள் யாவுஞ்சொல்வேன் திண்டான வாயிரங்கால் மண்டபந்தான் திறமாகக் கட்டியிருக்கும் வண்மைபாரே |