| பதியான தீவுதீவாந்திரங்கள் பறக்கவே குளிகையொன்று செடீநுதுகொண்டேன் நதியான சத்தசாகரமும் கண்டேன் நாதாக்களிருப்பிடமும் துறையுங்கண்டேன் விதியான சத்திரங்கள் மலைபோற்றங்கம் விஸ்தாரமாயிருக்குங் குகையுங்கண்டேன் மதியான வெள்ளியென்ற கானாற்கண்டேன் மகத்தான சுரங்கமுதல் யான்கண்டேனே |