| பாரேதான்வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று பாங்காகத் தானுருக்கியெடுத்துப்பாரு சீரேதான் கருப்புவன்னக் கனகமாகும் சிறப்புடனே யூதிப்பார் சிவந்துபொன்னாம் நேரேதான் தகடடித்து புடத்தைப்போடு கெடிதான மாற்றதுவு மாறதாகும் கூரேதான் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்துக் குறிப்புடனே சென்றெடுத்து யுருக்கிப்பாரே |