| பாரேதான் பராபரியைப் பூசித்தேதான் பாங்கான சின்மயத்தி லிருந்துகொண்டு நேரேதான் மும்மலமும் விட்டகற்றி நெறியான வெட்டவெளி தன்னிற்சென்று சீரேதாத் ஜோதிமயந்தன்னைக்கண்டு சுடரொளியையெப்போது மனதிலெண்ணி கூரேதான் விட்டகுறை நேருமட்டும் குறிப்பாக சமாதியிலே யிருந்துபோற்றே |