| கருவான பிராணாயந் தன்னில்நின்று கதிப்புடனே சின்மயத்தைக் கடந்துமேதான் உருவான குருபீடந் தன்னைப்போற்றி வுத்தமனே உதாசினத்தை தள்ளிப்போடு மருவான கும்பகத்தில் நின்றுகொண்டு மகத்தான ஜெகஜோதி தன்னைப்பாரு திருவான மகெஸ்பரியாள் நிர்வாணிதானும் தேவியரும் கடாட்சித்து அர்ச்சிப்பாளே |