| வாங்கியந்த தெளிவிலே கல்லுச்சுன்னம் வளமாகத் தீநிறுத்தரைப்படிரண்டுபோட்டு தேங்கியதைமூன்றுநாள் கலக்கிவைத்துச் சிறப்பாக நாலாநாள் தெளிவுவாங்கி ஓங்கியொருபடிதானுங்கல்லுநயப்பொடித்து வொக்கவந்த தெளிவிலே கரைத்துப்போடு தாங்கியே நாலாநாள் தெளிவைவாங்கி சமர்த்தாக வடிகனத்த சட்டியிலேவூற்றே |