| போகாமல் சவர்க்காரச் சுன்னம்சொல்வேன் பொற்கொடிக்கு ஈசனன்று புகன்றவாறு வேகாமல் பூநீறுபதக்குவாரி விரைந்துவொரு பாண்டத்திலளந்துபோட்டு ஏகாமல் மனிதனுட அமுரிதானும் இதமாகப் பதினாறுபடிதான்வார்த்து சாகாமல் மூன்றுநாள் கலக்கிவைத்துச் சார்ந்தபின்பு நாலாநாள் தெளிவுவாங்கே |