| காணிந்தச் சூதம்நின்று வுருகும்போது கலங்காதே சம்பாதஞ் சத்தையூட்டு பூணிந்த ரசம்பத்து சத்துபத்து பொலிவாக வுருகையிலே புடமொன்று நீட்டு ஆணிந்தச் சத்துடராகமெல்லா மப்பனே பலபலவா வர்ணங்காணும் தோணிந்தச் சூதத்தை நிறுத்துப்பார்க்கத் துடியாக மணியிடையே நிற்குமென்னே |