| ஏற்றவே சாமமது பனிரண்டாகும் யெழிலான செந்தூரமென்ன சொல்வேன் மாற்றவே வெள்ளிசெம்பில் பத்துகொன்று வரிசைபெறத்தானுருக்கி குருவொன்றீய நாற்றமுடன் செம்பதுவும் நீங்கியேதான் நலமான வெள்ளயது மாற்றுகாணும் தோற்றவே பத்திலோர் தங்கஞ்சேர்த்து சுருதிபெற தகடடித்து புடத்தைப்போடே |