| கேளேதான் சார்புநூலறியவேண்டும் கொடியான வஷ்டாங்கம் பார்க்கவேண்டும் மீளேதான் தத்துவத்தின் மூலமார்க்கம் மிக்கான சடாதாரக் குருவின்மார்க்கம் பானேதான் குண்டலியின் வாசிமார்க்கம் பாங்கான அறாதாரத்தின் மார்க்கம் சூளேதான் ஓங்காரக் குளிகைமார்க்கம் சுடரொளியின் சின்மயத்தின் மார்க்கம்தானே |