| தாமேதான் பசுவுக்கு ஞானமார்க்கம் தாக்குடனே போதித்தால் அறிவுமுண்டோ வேமேதான் கரைகடந்த ஞானிதானும் வெளியான சற்குருவின் முன்னேவந்து போமேதான் சொன்னாலும் தெரியாதொன்றும் புகட்டினாலென்னபலன்தானுண்டாமோ நாமேதான் சொன்னபடி யேழாயிரத்தில் நலமான நுட்பமெல்லாம் காட்டினேனே |