| பாரேதான் யையந்தும் போக்கிவிட்டால் பசியேது ஞானத்தின் கதையேகாட்டும் சீரேதான் கலபமறிந்துண்ணவேண்டும் சிறப்பான வியாதிதன்னைத் தீர்க்கவேண்டும் நேரேதான் ரேசகத்தை நிறுத்தவேண்டும் நெடிதான கும்பத்தை மாற்றவேண்டும் கூரேதான் பூரகத்தைச் சாரவேண்டும் கூசாமல் காலூறி செபத்திடீரே |