| தானான பிள்ளையழச் சத்தத்கேட்டுத் தயவுடனே பால்கொடுக்குந்தாயைப்போல வேனான போகரிஷி இரக்கம்வைத்து விருப்பமுடன் தானுரைக்கும் கசாயகற்பம் பானான தேனதுவும் படிதானெட்டு பாங்காக அளந்துவொரு பாண்டமிட்டு கோனான மேல்மூடி சீலைசெடீநுது குறிப்புடனே பூமிக்குள் புதைத்திடாயே |