| பெளர்ணமியில் பிறந்தவர்கள்! இந்திய ஜோதிடத்தில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது நமது அன்னையை அடையாளப் படுத்தும் கிரகம். நமது பெண்களை அடையாளப் படுத்தும் கிரகம். சந்திரன் சுபக்கிரகம். குழந்தையாக இருக்கும்போது உடல் நலம், உரிய வயதில் வளர்ச்சி, வாழ்க்கையில் செழிப்பு, அதிர்ஷ்டம், நமது மன உணர்வுகள் ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தா அவர் நீரின்றி அமையாது உலகு. நீருக்கான கிரகம் அவர். கடல் அலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான். உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர்.
1. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person.
2. The Moon gives sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune.
3. It makes us moody, emotional, and sensitive.
ஜாதகனுக்குச் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்) சரியாக அமையாவிட்டால், வெற்றி என்பது கானல் நீராக இருக்கும். வெற்றிகளை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாது. தலையைச் சுற்றி (அதாவது பின் மண்டையைச் சுற்றி) மூக்கத்தொடுவது போல அனைத்துக் காரியங்களையும் செய்ய நேரிடும். சிலர் அடைப்படை வசதிகளுக்குக் கூட அவதிப்பட நேரிடும். சிலர் சின்ன வயதில் அதாவது 21 வயதுவரை பலவீனமாக அல்லது நோயுடன் இருக்க நேரிடும்.
For persons whose Moon is not rightly placed in their horoscopes or is ill-aspected, success becomes very illusive or difficult. Sometimes it even becomes difficult to achieve a comfortable life on earth. It makes such people weak or sick in their early years.
வளர்பிறைப் பெளர்ணமி காலத்தில் சுமார் 14 நாட்களை வளர்ச்சியான நாட்கள் என்பார்கள். அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் துவங்கி, பெளர்ணமிவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் என்பார்கள்.. பெளர்ணமிக்கு அடுத்த நாளில் துவங்கி, அமாவாசைவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் அல்ல - தேய்பிறை நாட்கள் என்பார்கள். உகந்த நாட்களில் செய்யும் சுப காரியங்கள் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால்தான் சிலர் வளர்பிறைச் சந்திர காலத்தில் கிடைக்கும் முகூர்த்த நாட்களில் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். ”வளர்பிறையில் பிறந்தவர்கள் வளமாக இருப்பார்கள்!” என்று சொல்வார்கள் The Moon is auspicious for those who are born in the ascending Moon cycle and malefic for those who are born in the descending Moon cycle. நமக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஜாதகத்தில் சந்திரன் வேறு கிரகங்களின் அமைப்பு மற்றும் பார்வைகளால் நல்ல நிலைமையில் இருந்தால் - அதாவது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கப் பரல்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அது நன்மையையே செய்யும். ஜாதகன் எப்போது மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பான். அப்படிப்பட்ட பிறப்பே நமக்குப் போதும். அமாவாசை, பெளர்ணமி குழப்பமெல்லாம நமக்கு வேண்டாம்.
சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்:
1 சிம்ம லக்கினத்திற்குச் சந்திரன் விரையாதிபதி. அவர் லக்கினத்தில் இருந்து, 7ஆம் வீடான (பகை வீட்டில் - அது சனியின் வீடு) சூரியன் இருந்தால், அந்த
2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?
2. கன்னி லக்கினத்திற்கு, சூரியன் விரைய அதிபதி - அவர் 7ஆம் வீடான மீனத்தில் இருந்து, கன்னியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பதால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன? 3 துலா லக்கினத்திற்குச் சொல்லவே வேண்டாம் - சூரியன் இங்கே நீசமடைந்து விடுவார். 7ல் சந்திரன் இருந்தாலும் அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன? இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
******ஆகவே உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம். |