|
குரு தோசமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நவக்கிரகங்களை வலம் வந்து வியாழ பகவானை நோக்கி வழிபட வேண்டும்.
"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக்
கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்
கதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை
நல்கும் இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி"
என்னும் தோத்திரம் பாடி வணங்க வேண்டும். இவ்வாறு விரதத்தை மேற்கொள்வதன் பலனாக நல்வாழ்க்கை, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
|