| ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா? |
|
ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கும், தொழிலாகச் செய்வதற்கும், ஆராய்ச்சி மட்டுமே செய்யவும் தனித்தனியான அமைப்புகள் உண்டா?
புதனின் ஆதிபத்தியம் வேண்டும் என்று சொல்லி விடாதீர்கள்...(சில ஜோதிடர்கள் சொல்வதனால் கேட்கிறேன்) கூட்டு, அவியல், பொரியல் என்று சமையலில் காய்களின் எண்ணிக்கையும் அளவும் வேறு படுவதைப் போல, இதிலும் வேறுபாடு உண்டு. புதன் நன்றாக இருந்தால் கற்றுக் கொள்ளலாம். புதனும் குருவும் நன்றாக இருந்தால் கற்றுக்கொண்டு ஆராய்ச்சி செய்யலாம். அவர்கள் இருவரோடு, சனி அல்லது பத்தாம் இடத்து அதிபதியும் கலக்கலாக இருந்தால் ஜோதிடத்தைத் தொழிலாகச் செய்யலாம். செய்து காசு பார்க்க வேண்டுமென்றால் அந்த அமைப்புடன், 2 & 11ஆம் வீடுகளும் நன்றாக இருக்க வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா? தலை சுற்றாமல் இருக்க 3 & 6ஆம் இடத்து அதிபதிகள் வலிமையாக இருக்க வேண்டும்
|