| திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன? |
|
திருமணம் தாமதமாவதற்குக் காரணம் என்ன?
திருமணம் தள்ளிக்கொண்டே போவதற்கு ஜாதகப்படி உள்ள காரணங்களில் சில:
1. ஏழாம் வீட்டதிபதி நீசம் பெற்றிருந்தாலும் அல்லது வக்கிரகதியில் இருந்தாலும் அல்லது அஸ்தமனம் ஆகியிருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
2. ஏழாம் வீட்டதிபதி 12ல் மறைந்திருப்பதோடு, ஏழாம் வீட்டில் சனி வந்து குடியிருக்கும் அமைப்புள்ள ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் தாமதப்படும்.
3. ஏழாம் வீட்டதிபதி எட்டாம் வீட்டில், எட்டாம் அதிபதியுடனும், சனியுடனும் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதப்படும்.
4. ஒன்று & ஏழாம் வீடுகளின் மேல் (1/7 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தால் திருமணம் தாமதப்படும். (லக்கினத்தில் செவ்வாய் அல்லது சனி இருந்தால், அவர்களுடைய நேரடிப்பார்வை ஏழாம்
வீட்டின் மேல் விழுந்து ஜாதகனின் திருமணத்தைத் தாமதப்படுத்தும்)
5. அதேபோல இரண்டு & எட்டாம் வீடுகளின் மேல் (2/8 house axis) சனி, மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
6. சுபக்கிரகங்கள் வக்கிரகதியில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
7. சுக்கிரன் அஸ்தமனமாகியிருந்தால் திருமணம் தாமதப்படும்.
8. ஏழாம் அதிபதி ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்களின் பார்வையில் இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
9. ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் தாமதமான திருமணம்!
10. மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசி ஆகிய இடங்கள் ஏழாம் வீடாக இருந்து, அங்கு சனி வந்து டென்ட் அடித்து இருந்தால் திருமணம் தாமதப்படும்.
11.சூரியனும், சுக்கிரனும் கூட்டாக மிதுனம் அல்லது சிம்மம் அல்லது கன்னி ராசியில் இருந்தால் ஜாதகனுக்குத் தாமதமாகத் திருமணம் நடைபெறும். அதுவே பெண்ணின் ஜாதகமாக இருந்தால் ஜாதகி திருமண வாழ்வு
வேண்டாம் எனக் கூறிவிடுவாள்.
12. சனி அல்லது செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் அல்லது ஜாதகியின் திருமணம் தாமதப்படுவதோடு, அவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்து கொள்ள நேரிடும்.
இந்த அவலங்களில் இருந்து ஜாதகனை மீட்டு, அவனுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக்கூடிய ஒரே கிரகம் குரு பகவான் ஆவார். ஆகவே உரிய காலத்தில் திருமணமாகாமல் தவிப்பவர்கள். தினமும் குரு பகவானை
வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
இதெல்லாம் பொதுவிதிகள். தனி நபர்களின் ஜாதகத்தில் உள்ள வேறு சில நல்ல அமைப்புக்களை வைத்து இந்த விதிகள் தள்ளுபடியாகிவிடும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே யாரும் குழப்பம் அடைய வேண்டாம்.
குறிப்பாகப் பெண் வாசகர்கள். |