தந்தை வழி தாத்தா, வெளிநாட்டு பயணங்கள், எலெக்ட்ரானிக்ஸ், அவியோனிக்ஸ், நடிகர், புகைப்படம் எடுத்தல், சிபிஐ அதிகாரி, பாதுகாப்பு, கடத்தல், திருடன், வாய், தலை, காது, உதடுகளுக்கு, பெருங்குடல், மலக்குடல், Testicles, முக்கிய நுழைவு, பழைய வீடு, பாழடைந்த சுவர், உள்ள கிராக் சுவர், டார்க் அறை, பெரிய மண்டபம், கோபுரம், முட்டை வடிவம், தனிமையான பகுதிக்கு, அகலமான சாலை, சுற்று வட்டத்தில், வட்ட வடிவம், இருள், உடல்நலத்தை கவனிக்க, மாயத்தோற்றம், இல்லூசன், நிழல், குடை, சக்கர வடிவம், சக்கரத்தின் சுற்றளவு, விளையாட்டு மைதானம், பெரிய அளவு, மொட்ட மாடிக்கு, மரங்களின் மேல் பரவி, உலர்ந்த மரம், ரப்பர், பிளாஸ்டிக், உலர்ந்த தோல், கிடங்கிலிருந்து, காபி விதை, கயிறு, பாம்புகள் கடவுள், ஊழல், விபத்துகள், இரைப்பை பிரச்சனைகள், பாம்பின் வாயில்.
இராகு காரகத்துவம்
விதவை. பிரம்மாண்டமான அல்லது மிகப்பெரிய என்ற வார்த்தையின் அதிகாரி. சுவாச கோலாறு. அலர்ஜி. அன்னியர்கள் சகவாசம். தூதர். தூதர் வகை அனத்தும். வெளிநாடு. வெளிநாடு சார்ந்த அனைத்திற்கும் ராகுவே காரணம். போலி கலப்படம் போதை இருட்டு வகைத் தொழில் சப்தகிரகங்கள். ஓரினச் சேர்க்கையாளர்கள். கொடூரமான சித்திரவதைவாதிகள். மசூதி. மயக்கம். மதமாற்றம். ரகசியத்தின் கர்த்தா. அதகப்பன் வழிமுதியோர்கள். பொய். எதையும். அதிகப்படுத்துதல். வழக்கத்தை மாற்றி விடுதல். செய்வினை சேதாரம். தோல்நோய். எதையும் பெரிதும் படுத்துதல். வெளி நோய். துர்க்கை. பாட்டி. பாட்டன்கள். பில்லி சூன்யம். அலர்ஜி. துர்மரணம். விபத்துக்கள். கண்டங்கள். பெரியன எல்லாம் இராகுவின் காரகம். இராகு இல்லாத விபத்தோ. மரணமோ. கண்டமோ இல்லை. விஷம்,
கண்ணும், கையும் தவிர வேறு உபகரணங்கள் இல்லாத காலத்தில் நமது
முனிவர்கள் தங்களது ானதிருஷ்டியால் கணித்து எழுதியதுதான் கடல்
போன்ற வானவியல் கலையும், ஜோதிடக்கலையும் ஆகும்.
ராகு & கேது ஆகிய கிரகங்களை அவர்கள் கொடிய சர்ப்பத்திற்கு நிகராக
ஒப்பிட்டு எழுதியும், அந்த இரு கிரகங்களுக்கு நடுவில் மற்ற ஏழு கோள்
களும் வானத்தில் இருக்கும் நிலையைச் சர்ப்பகாலம் என்றும், அந்தக்
காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை காலசர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்
அல்லது ஜாதகர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்
ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு
ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக
இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்!
Kala Sarpa Dosha cum Yoga is formed when all the planets are hemmed
between Rahu & Ketu.( that is sandwiched between Rahu and Ketu)
இதில் லக்கினம் உள்ளே இருந்தாலும் அல்லது அந்த ஏழு கட்டங்களைத்
தாண்டி வெளியே இருந்தாலும் அது அந்த தோஷத்தில் அடக்கம்!
ராகுவில் ஆரம்பித்துக் கேதுவில் முடியும் நிலைக்கு சவ்ய காலசர்ப்ப தோஷம
என்றும், கேதுவில் ஆரம்பித்து ராகுவில் முடியும் நிலைக்கு அபசவ்ய
காலசர்ப்ப தோஷம் என்றும் பெயர்கள் உண்டு. பலன்களும் மாறுபடும்.
சாயா கிரகங்களான ராகுவைத் தலைப் பகுதியாகவும், கேதுவை வால்
பகுதியாகவும் ஜோதிடம் சிறப்பித்துக் கூறுகிறது.
அந்த அமைப்புள்ள ஜாதகர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதி - அந்த
தோசத்திற்கு உரிய பலன்களை அவர்கள் அனுபவிக்கும் காலம் துன்பமான
தாகும். சோகமானதாகும்.
அனுபவித்தவர்களுக்கு, அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு
மட்டுமே அது தெரியும்.
லக்கினத்தில் துவங்கி முதல் ஏழு வீடுகளுக்குள் இந்த தோஷம் உள்ளவர்
களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முதல் பகுதியும், ஏழாம் வீட்டில் துவங்கி
லக்கினத்தில் முடிபர்வகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் இரண்டாவது
பகுதியும் மோசமானதாக இருக்கும். இந்த மோசமான என்ற சொல்லுக்குள்
எல்லாவிதத் துன்பங்களும் அடக்கம்!
இந்த தோஷம் உள்ளவனின் ஜாதகத்தில், வேறு நல்ல யோகங்கள் எதுவும்
இல்லை என்றால், அவன் வேலையின்றித்திரிவான், திருமணவாழ்க்கை
இருக்காது.பல தீய பழக்கங்களுக்கு ஆளாகி, பலராலும் துக்கப்படும்
நிலையில் வாழ்வான்.
ஆகவே இந்த தோஷம் உள்ளவர்கள், பயந்துவிடாமல், ஜாதகத்தில் வேறு
என்னென்ன யோகம் இருக்கிறது என்று பார்த்து ஆறுதல் கொள்ளவும்.
இதில் இரண்டுவிதக் கருத்துக்கள் உண்டு. 33 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம் உண்டு என்பார்கள். சிலர் அஷ்டகவர்க்கத்தில் லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கிறதோ அத்தனை ஆண்டுகள்வரை உண்டு
என்பார்கள். உதாரணத்திற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தில் 28 பரல் கள் என்றால், அவருக்கு 28 ஆண்டுகள் வரை இந்தத் தோஷம். உண்டு பிறகு தோஷம் விலகியவுடன் அதுவே யோகமாக மாறி ஜாதகரை உயர் விற்குக் கொண்டு போகும்.
இந்தியாவின் ஜாதகத்தில் லக்கினத்தில் 44 பரல்கள். நாம் சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு கூட்டல் அந்த 44 = 1991ஆம் ஆண்டுவரை நம் நாட்டை தோஷம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு தான் நாம் அசுர வேகத்தில் பல துறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக் கின்றோம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள்
1.
இந்த தோஷம் லக்கினத்திலிருந்து (அதாவது லக்கினத்தில் ராகு அல்லது
கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற அத்தனை
கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) துவங்கினால், குடும்பத்தில் பல
சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். தீராத பிணிகள் (chronic health problems)
ஏற்படும்!
2.
இந்த தோஷம் இரண்டாம் வீட்டிலிருந்து (அதாவது லக்கினத்திற்கு அடுத்துள்ள
இரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது அமர்ந்திருக்க அடுத்துள்ள ஆறு
கட்டங்களுக்குள் மற்ற அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு)
துவங்கினால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும்.ஏற்படும். அதோடு பணப்
பிரச்சினைகள் ஏற்படும்!
3.
இந்த தோஷம் மூன்றாம் வீட்டிலிருந்து துவங்கினால், உடன்பிறப்புக்களுடன்
சிக்கல்கள் இருக்கும்.விரோத மனப்பான்மை ஏற்படுத்தும்.
4.
இந்த தோஷம் நான்காம் வீட்டிலிருந்து துவங்கினால், தாயாருடன் கருத்து
வேற்றுமையை உண்டாக்கும். தாயாரின் அன்பு கிடைக்காமல் போய்விடும்.
வீடு, வாகனங்களை வைத்துப் பலவிதமான பிரச்சினைகள் உண்டாகும்.
5.
இந்த தோஷம் ஐந்தாம் வீட்டிலிருந்து துவங்கினால், பெற்ற குழந்தைகளை
வைத்துப் பிரச்சினைகள் ஏற்படும்.
6.
இந்த தோஷம் ஆறாம் வீட்டிலிருந்து துவங்கினால், நோய்கள், கடன்கள்
விரோதிகள் என்று பிரச்சினைகள் வந்து குடி கொண்டுவிடும்
7.இந்த தோஷம் ஏழாம் வீட்டிலிருந்து துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் பிரச்சினைகள் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது. பதிலுக்குப் பிரச்சினைகள் மட்டும் இருக்கும்.
8.
இந்த தோஷம் எட்டாம் வீட்டிலிருந்து துவங்கினால், மனைவியுடன்
சரளமான வாழ்க்கை இருக்காது. சிக்கல்கள் இருக்கும்.அடிக்கடி
விபத்துக்கள் ஏற்பட்டுப் பல பிரச்சினைகள் உண்டாகும்.
9
இந்த தோஷம் ஒன்பதாம் வீட்டிலிருந்து துவங்கினால், தந்தையுடன்
பிரச்சினைகள் ஏற்படும். மிகவும் துரதிர்ஷ்டமான பலன்கள் ஏற்படும்
(இது பாக்கிய ஸ்தானமல்லவா? அதனால் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால்
என்ன பாக்கியம் கிடைக்கும்? சொல்லுங்கள்)
10.
இந்த தோஷம் பத்தாம் வீட்டில் துவங்கினால், செய்யும் தொழிலில்,
வியாபாரத்தில் அல்லது வேலையில் நிலையான போக்கு இருக்காது.
அவஸ்தையாக இருக்கும்.நிம்மதி இருக்காது.
11.
இந்த தோஷம் பதினொன்றில் துவங்கினால், நிதி நிர்வாகம், முதலீடுகள்
பங்கு வணிகம் என்று எந்த நிதி நிலைப்பாட்டிலும் நாம் நினைத்தது
நடக்காது. மாறாக நடந்து நம்மைப் புரட்டிப்போடும்.
12
இந்த தோஷம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்து துவங்கினால், திகைக்க
வைக்கும் செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். பணத்
தட்டுப்பாடு உண்டாகும். மொத்தத்தில் செலவும், விரையங்களும் சேர்ந்து
மனிதனை (ஜாதகனை) ஒரு வழி பண்ணிவிடும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலும் சில விவரங்கள்:
1.
கால சர்ப்ப தோஷ ஜாதகனுக்கு, அவனுடைய ஜாதகத்தில் இரண்டு
அல்லது மூன்று கிரகங்கள் உச்சம் பெற்று இருந்தாலும், அந்த தோஷம்
முடியும் காலம்வரை அந்த உச்ச கிரகங்களின் பலனை அவன் அடைய
முடியாது.
2.
லக்கினத்தில் ராகு இருக்க, வேறு நல்ல கிரகங்களின் பார்வையின்றி
லக்கினத்திலிருந்து (அதாவது அடுத்துள்ள ஆறு கட்டங்களுக்குள் மற்ற
அத்தனை கிரகங்களும் இருக்கின்ற அமைப்பு) கால சர்ப்ப தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குத் திருமண வாழ்வில் கடுமையான ஏமாற்றங்களும்,
சோதனைகளும் உண்டாகும்.
3.
நான்காம் வீடு அசுபர் வீடாக இருந்து, அங்கிருந்து இந்த தோஷம்
துவங்கினால், ஜாதகருக்குக் கல்வியில் தடை ஏற்படும். அதுவே சுபர்
வீடாக இருந்தால் உயர் கல்வி கிடைக்கும்.
4.
ஐந்தாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், ஜாதகருக்கு
புத்திர தோஷம் ஏற்படும். குழந்தைகள் பிறப்பது தாமதப்படும். அல்லது
வேறு தீய அமைப்புக்களை வைத்துக் குழந்தைகள் இல்லாது போய்விடும்.
5
ஆறாம் வீட்டை வைத்து இந்த தோஷம் துவங்கினால், அங்கே ராகு இருந்து
நல்ல கிரகங்கலின் பார்வை இல்லையென்றால், சிறைவாசம், உடல்நிலை
பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.
6.
ராகு அல்லது கேது தாங்கள் இருக்கும் வீட்டில் அமரும் கிரகத்துடன்
கூட்டணி போட்டுப் பலன்களைக் கொடுப்பார்கள். அதனால் அவர்களுடன்
சேரும் கிரகம் தீயதாக இருந்தால் தீயபலன்கள் இரட்டிப்பாகும்.
நல்ல கிரகமாக இருந்தால் - உதாரணத்திரற்குக் குருவாக இருந்தால்
ராகுவும் அவருடன் சேர்ந்து நல்ல பலன்களை வழங்க ஆரம்பித்து
விடுவார். அதற்கு ஒரு ஸ்டைலான பெயரும் உண்டு. அதாவது ராகுவும்
குருவும் சேர்ந்தால் அதற்குச் "சண்டாளயோகம்" என்று பெயர்!
7.
ராகு-சனி' அல்லது ராகு - செவ்வாய்' அல்லது ராகு - சூரியன் என்று
இரண்டு கிரகக் கூட்டணி ஏழாம் வீட்டில் இருந்தால் கடுமையான
களத்திர தோஷம். எத்தனை தாரம் என்றாலும் ஒன்று கூட நிலைப்பதில்லை!
8.
கால சார்ப்ப தோஷம் cum யோகம், ஒரு ஏழையைக் கோடீஸ்வரனாகவும்
செய்யும், அதெ போல பெரிய கோடீஸ்வரனை ஒன்றும் இல்லாதவனாக
தெருவில் கொண்டு வந்து நிறுத்தவும் செய்யும். அது அவரவர்கள் ஜாதகப்
பலன். அல்லது எப்பொதும் நான் சொல்வதைப்பொல வாங்கி வந்த வரம்!:-)))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-
சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும்.
கால சர்ப்ப தோஷம் உள்ள சிலருக்கு, அந்த தோஷ காலம் முடிந்த
பிறகே திருமணம் நடைபெறும்.
அதுபோல கால சர்ப்ப தோஷத்துடன் பிறக்கும் குழந்தைகள் உள்ள
பெற்றோர்களும், கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.
பெரிய தலைவர்கள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் என்று
இந்த தோஷத்தில் பிடிபட்ட பலரும் சிறுவயதில் பல தொல்லைகளுக்கு
ஆளாகியிருக்கிறார்கள். அந்த தோஷம் நிவர்த்தியான பிறகு
உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே
தங்கள் சொந்த முயற்சியால்தான் அந்த நிலையை எட்டியிருப்பார்கள்.
இந்த தோஷத்தில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டு மீண்டு,
பிறகு ஒரு உன்னத நிலையை எட்டி, பிறகு சிறிது காலத்திற்குப்
பிறகு, படு பாதாளத்தில் விழுந்து விடும் நிலையும் சிலருக்கு
ஏற்படுவது உண்டு. அது அவர்களின் தனிப்பட்ட ஜாதகத்தில்
உள்ள வில்லங்கமான கிரக அமைப்புக்களால் ஏற்படுவதாகும்.
கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, ராகு அல்லது கேதுவின்
திசைகள் வந்தால், நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் அந்த
திசை முடியும் போது போர்டிங் பாஸ் கொடுத்து அவர்கள் ஜாதகனை
மேலே அனுப்பியும் வைத்து விடுவார்கள்.
ஆனால் அவ்வாறு வரும் திசைகளில் துன்பமான பலன்களையே
ஒருவர் அனுபவித்தால், அவரை அவர்கள் உயிரோடு விட்டு விட்டு
அடுத்து வரும் திசைகளில் நற்பலன்களை அனுபவி என்று சொல்லிக்
கைகுலுக்கி விட்டுப் போய்விடுவார்கள்.
கால சர்ப்ப தோஷம் உள்ள ஆண், அதேபோல கால சர்ப்ப தோஷம்
உள்ள பெண்ணை மணம் செய்து கொள்வது நல்லது.பல பிரச்சினைகளை
இருவரும் தவிர்க்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பரிகாரங்கள்:
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம், போன்ற
நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம்
வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகஷ்வரம்
என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்குச் சென்று
ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது
முதல் பரிகாரம் ஆகும். அதனால் தடைகள் அகலும். துன்பங்கள்
குறையும்.
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவி
லுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவருடைய (கேதுவினுடைய)
நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும்
நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி
என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும்
தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.
சும்மா பெயருக்காக (நாம் கே வாஸ்தே என்று) சென்று வழிபடுவதைவிட
வழிபட்டால தோஷம் குறையும் என்ற முழு நம்பிக்கையோடு சென்று
வழிபடுவது அதி முக்கியம். அதையும் மனதில் கொள்க!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு கால சர்ப்ப தோஷ ஜாதகம் ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்:
இசையில் ஞானி அவர். அவருடைய ஜாதகம்தான் இது. 1943 ல் பிறந்த
அவர். 1976ஆம் ஆண்டு வரை சுமார் 33 ஆண்டுகள் எவ்வளவு சிரமப்
பட்டார் என்பதும், அதற்குப் பிறகு அந்த தோஷமே அவருக்கு யோகமாக
மாற, தமிழகத்தையே ஒரு கலக்குக் கலக்கி, லட்சக்கணக்கான அபிமானி
களைப் பெற்று ஒரு உன்னத நிலையை அடைந்தார் என்பதையும்
தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் தன் நினைவில் வைத்திருக்கும்படியான
அற்புதமான மனிதர் அவர்!
கால சர்ப்ப தோஷத்துடன் பிறந்த சில பிரபலங்கள்:
மகாத்மா காந்தி - 2.10.1869
பண்டிட் ஜவஹர்லால் நேரு - 14.11.1889
நெப்போலியன் - 15.8.1769
ஹிட்லர் - 20.4.1889
முசோலினி - 29.7.1883
ராஜிவ் காந்தி - 20.8.1944
ஹர்ஷத் மேத்தா - 29.7.1954
************************************************** |