Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 Pay online Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 8870974887 WhatsApp : 8870974887 Email id : vs2008w7@gmail.com
சித்தர் என்னும் சொல்லுக்கு உரிய விளக்கம்
Untitled Page

சித்தர்கள் 1

 

முன்னுரை

 

சித்தர் என்னும் சொல்லுக்கு உரிய விளக்கம், சித்தர்கள் எனப்படுவோர் யாவர்? சித்தர்களின் வகையினர், தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் பாடல்களில் காணப்பெறும் சித்து விளையாடல்கள் பற்றிய செய்திகள், சித்தர் பாடல்கள்வழி அறியப்பெறும் சீர்திருத்தங்கள், சித்தர் பாடல்களில் அமைந்துள்ள யாப்பு வகைகள் முதலானவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.  சித்தர் என்னும் சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில் பேசப் பெறாவிடினும், அவரைப்பற்றிய குறிப்புக்கள் இலை மறை காய்போல அவற்றில் காணப்படுகின்றன.


மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன்                                     (புறத்திணையியல் 20)


எனவரும் தொல்காப்பிய நூற்பா அடிகள் சித்தரைக் குறிக்கும் எனக் கருதுகின்றனர்.  இதற்கு உரைவகுத்த நச்சினார்க்கினியார், "காமம், வெகுளி, மயக்கம்" இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்" என உரை எழுதிக் கலசயோனியாகிய அகத்தியர் முதலியோரும் அறிவர் என்றுணர்க" என விளக்கம் எழுதியுள்ளார்.  எனவே தொல்காப்பியர் கூறிய அறிவரைச் சித்தர் என நச்சினார்க்கினியர் கருதியமை உணரத்தக்கது.

 

                நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

                மறைமொழி தானே மந்திரம் என்ப                      (செய்யுளியல் 176)

        என்னும் தொல்காப்பிய நூற்பாவும்

                நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

                மறைமொழி காட்டி விடும்

 

என்னும் குறளும், சித்தரையும் அவர்தம் நூல்களையும் குறிப்பனவாகச் சுட்டுவர்.

நோக்கம்

                திருமூலர்முதலாக காகபுகண்டர் சித்தர் ஈறாக உள்ள 25 சித்தர்களின் சித்து விளையாடல்கள் பற்றிய செய்திகள், சீர்திருத்தங்கள் யாப்பு வகை முதலானவை பற்றிய செய்திகள் இப்பாடத்தின் வழி விளக்கப்படுகின்றன.

பொருடக்கம்

                திருமூலர் முதல் காகபுகண்டர் சித்தர் ஈறாக 25 சித்தர்களின் செய்யுள் இடம் பெறுகின்றன.

 

 சித்தர் யார்?

 

                சித்தர்கள் என்றால் வீடுபேறு அடைந்தவர்கள் எனப்பொருள் கொள்வர் சிலர், ஒரு செயல் நிறைவேறிவிட்டதா என வினவுவார் காய சித்தி ஆயிற்றா என வினவுவது வழக்கம், சாயுச்சிய நிலை அடையப்பெற்றவரே சித்தர் என்பர்.  அட்டமா சித்தி முதலிய யோகசித்தி பெற்றவர்களையும் சித்தர்கள் என்று அழைப்பர்.

                சிலர் சித்துக்கும் சித்தத்ததுக்கும் தொடர்பு காட்டிச் சித்தத் தெளிவுடையாரே சித்தர் என விளக்கம் அளிப்பர்.

 

                'சிந்தையிலே களங்க மற்றார் சித்தன் ஆவான்"         (அகத்தியர் நூறு 50)

 

                'சிந்தை தெளிந் திருப்பவன் ஆர் அவனே சித்தன்"              

                                                                                                                     (வான்மீகர் சூத்திர ஞானம் 2)

                'செகமெலாம் சிவமென்றே அறிந்தோன் சித்தன்

                திறந்துமனத்தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்"          (வான்மீகர் சூத்திர ஞானம் 3)

 

எனவரும் இப்பாடல்கள் மேற்கூறிய கருத்திற்குச் சான்றாக விளங்குகின்றன.

                சித்தருட் சித்தராய் விளங்கிய திருமூலர் சித்தர் பற்றிக் கூறும் செய்திகளும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

 

                'யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்

                யோகச் சமாதியின் உள்ளே உளரொளி

                யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி

                யோகச் சமாதி உகந்தவர் சித்தரே"                      (1490)
 

                'சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்

                சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்

                முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்

                சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே"                                     (2526)

 

எனவரும் திருமூலன் பாடல்கள். யோகச் சமாதியை விரும்பியவரும் சிவத்தைக் கண்டவரும் சித்தர் ஆவர் எனக் குறிப்பிடும்.

                கடவுளரும் சித்தராகக் கருதப்பட்டனர். அவர்தம் செயல்களும் சித்துக்களாக மதிக்கப்பட்டன. பழினியிலுள்ள முருகன் கோயில் சித்தன் வாழ்வு என அழைக்கப்பெற்றது. எல்லா ஆற்றலும் பெற்றிருப்பவன் ஆதலின் முருகனுக்குச் சித்தன் என்னும் பெயரும் உண்டு. சிவபெருமான் செய்த அருஞ்செயல்களைத் திருவிளையாடற் புராணம் சித்துக்களாகக் குறிப்பிடும். மக்களால் சித்தர்களும் கடவுளராகப் போற்றப்பட்டனர்.

                மூச்சினை யடக்கி யோக ஆற்றலினால் உடலில் உள்ள மூலதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற இவ் ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலபல அனுபவமும் வெற்றியும் கண்டு. அப்பாலிலுள்ள  எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் என்ற வழக்கம் பரவுயுள்ளது எனப் பன்மொழிப்புலவர் தெ.பொ. மீனாட்சி சுத்தரனார் கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

                ஆகம மாகிய இந்த மனித உடம்பிலே தெய்வப் பக்தி கொண்டு இதனுள் அருட்சக்தியை வளர்த்து ஆன்ம பணாமத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருவாழ்வு வாழ்ந்து அருளை வழங்கி வருகின்ற பெயோர்களே மகான்களே சித்தர்கள், என்று மீ.ப. சோமசுந்தரனார் தம் சித்தர் இலக்கியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பகுதி 1 பக்கம் 14)

                இறையடியார்களுள் பக்தர், பகவர், முனிவர், சித்தர் எனப் பல வகையினர் இருந்தனர் என்பர், பெரியாழ்வார்  தம் பாசுரத்தில்

 

                பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

                முனிவர்களும் பரந்த நாடும்

                சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசை விளக்காய்

                நிற்கின்ற திருவரங்கமே

 

என்று பாடியிருத்தல் மேற்கூறியதற்குச் சான்றாக அமைகிறது. சித்தர் பாடல்களிலும் முனிவர், இருடியர், சித்தர் எனப் பல வகையினர் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. திருவள்ளுவர் ஞானத்தில் (14) காயசித்தி, மாயசித்தி, யோகசித்தி, வாத சித்தி எனப் பல வகைச் சித்திகள் கூறப்பட்டுள்ளன. சித்தரையும் காயசித்தர், யோகசித்தர், ஞானசித்தர் எனச் சிலர் மூவகையினராகக் கூறுவர். இங்ஙனம் சித்தர்களையும் சித்திகளையும் பாகுபடுத்தியும் பாடியுள்ளனர்.

சித்துக்கள் பற்றிய குறிப்புக்கள் பண்டைய இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றன.

 

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்

விலங்கிடு முந்நீர் காலிற் செல்லார்                     (130)

என்னும் குறுந்தொகைப் பாடல் அடிகளும்.

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்தில் தியுமோர் சாரணன்

 

என்னும் மணிமேகலைத் தொடர்களும் சில சித்துக்களைத் தெவிக்கின்றன.

                தாயுமானவர், பாம்பாட்டிச் சித்தர், இராமலிங்க அடிகள் முதலானோர் தத்தம் பாடல்களில் சித்து விளையாடல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.

                தாயுமானவர் மதயானையை அடக்குதல், கரடி புலிகளின் வாயைக் கட்டுதல், சிங்கத்தை முதுகின் மேல் ஏற்றுதல், பாம்பைப் பிடித்தாட்டுதல், ஐந்து உலோகப் பொருள்களையும் விலையுயர்ந்த பொருளாக மாற்றுதல் பிறர் கண்ணிற் படாமல் உலாவுதல், தேவரை அடிமை கொள்ளல், எப்பொழுதும் இளமையோடிருத்தல், பிறர் உடலிற் புகுதல், நீர்மேல் நடத்தல், நெருப்பில் அமர்தல், முதலிய சித்துக்களைத் தம் பாடலில் (தேசோ மயானந்தம் 8) குறிப்பிடுகின்றனர்.

                பாம்பாட்டி சித்தர் குறிப்பிடும் சில சித்துக்களைக் கீழ்வரும் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
 

                எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்;

                                இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்;

                கட்டுக் கடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்;

                                கருவிடந் தன்னைக் கக்கி ஆடு பாம்பேர்

                மூண்டெயும் அக்சினிக்குள் மூழ்கி வருவோம்;

                                முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்;

                தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்;

                                தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே;

                செப்பய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்;

                                செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்;

                இப்பெய உலகத்தை இல்லாமற் செய்வோம்;

                                எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடு பாம்பே

 

இராமலிங்க அடிகளார் சில சித்துக்களைப் பின் வரும் பாடல் அடிகளில் காட்டுகின்றார்.

 

                ''கல்லையும் உருக்கலாம் நார் உத்திடலாம்

                                கனிந்த கனியாகச் செய்யலாம்;

                கடுவிட முண்ணலாம் அமுதாக்கலாம் கொடுங்

                                கரடி, புலி, சிங்கம் முதலா

                வெல்லு மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி

                                வித்தையும் கற்பிக்கலாம்;

                மிக்க வாழைத்தண்டை விறகாக்கலாம் மணலை

                                மேவு தேர் வடமாக்கலாம்;"

 

இங்ஙனம் சித்தர்கள் பல்வேறு வகையான சித்து விளையாடல்களை செய்தமையை மேற்குறிப்பிட்ட பாடல் வகள் தெவிக்கின்றன.

சித்தர் பாடல்களின் இயல்பு

                சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர். சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலம் ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற வடநாட்டு நவநாத சித்தர்கள் போலத் தமிழகச் சித்தர்களும் சீர்திருத்தத் கருத்தக்களை வலியுறுத்தி மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர். இராமலிங்க அடிகாளர் தெவித்துள்ள மரணமிலாப் பெருவாழ்வு சித்தர்கள் கூறிய நெறியேயாகும். 'கூற்றம் குதித்தலும் கைகூடும்" (269) என்னும் வள்ளுவர் கருத்தினை வாழ்க்கையில் நிலைநிறுத்திக் காட்டியவர்கள் இச்சித்தர்கள், இவர்கள் ஊழையும் வெல்லலாம் என்பதற்கான வழி முறைகளைத் தம் பாடல்களின் இயம்பியுள்ளனர்.

 

வைத்தியம், இரசவாதம், ஞானம் மந்திரம் முதலியவை பற்றி எல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர்.  மேலும் வானநூல், கணிதம் முதலியவை பற்றிய புலமையையும் இவர்தம் நூல்களில் காணமுடிகிறது.

 

                சித்தர் பாடல்கள் பொதுமக்களும் பாடும் வண்ணம் எளிமையான நடையில் அமைந்தவை. எனினும்அய கருத்துக்கள் அடங்கியவை . கல்லாதவர், கற்றவர் இரு சாராருமே கேட்டு மகிழும் வகையில் அப்பாடல்கள் விளங்குகின்றன.

 

                ஊத்தை குழிதனிலே மண்ணை எடுத்தே

                உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே

                வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்

                வறையோட்டுக்கும் ஆகாது என்று ஆடுபாம்பே

 

என்னும் பாம்பாட்டி சித்தன் எளிய பாடல் மானிட யாக்கையின் இழிவைத் தெளிவுபடுத்துகின்றது.

 

                மாங்காய்ப் பால்உண்டு மலைமேல் இருப்போருக்குத்

                தேங்காய்ப்ப தால் ஏதுக்கடி-குதம்பாய்

                தேங்காய்ப்பால் ஏதுக்கடி.

 

                ஞானப் பாலுண்டு தலை உச்சியலே சிந்தனை கூடி நிலைத்து நிற்கும் ஞானிகளுக்கு உலக இச்சையாகிய பிற இன்பங்கள் வேண்டியதில்லை எனக் குதம்பைச் சித்தன் மேற்காணும் பாடலுக்கு மீ.ப . சோமு விளக்கம் அளிக்கிறார்.

                மாங்காய் என்பது பிரமம், பால் என்பது அதன் அனுபவம், அதாவத ஞானப்பால், தேங்காய்ப்பால் உலக இச்சை, மலை என்பது மேலான சமாதி, இ.வ்வாறு உள்ளுறைப் பொருள் அமைத்துப் பாடும் பாடல்களைப் பிறிது மொழிதலணி என்று கூறுவர், சித்தர்கள் தம் கொள்கைகளை மறைவாக வைத்துக் கொள்ள குழுஉக் குறியினைப் படைத்துக் கொண்டனர்.  திருமந்திரத்திலுள்ள சூனிய சம்பாடணை (உரையாடல்) இதற்குச் சயான சான்றாகும். அவர்களின் மருத்துவ நூல்களும் இவ்வாறு குழுஉக் குறிகளைப் பயன்படுத்தியுள்ளன.

                சித்தர் இலக்கியம் சீர்திருத்தம் பேசினாலும் நாத்திகத்தன்மை யுடையதன்று சித்தர்கள் இறைப்பற்று மிகவும் உடையவர்கள். தஹ்நெறி, அட்டாங்கயோகம் முதலியவை கடினமாகத் தோன்றினாலும் அவர்கள் எடுத்துரைக்கும் நெறி சிறந்ததாகும். சயை, கியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறியினையும் சித்தர்கள் பின்பற்றியுள்ளனர். சமயப்பொது நோக்கு, சாதி வேறுபாடின்மை. மூடப் பழக்க வழக்கங்களைச் சாடுதல் முதலானவை அவர்தம் பாடல்களில் காணப்பெறும் சீர்திருத்தங்களாகும்.

 

                கோயிலாவது ஏதுடா? குளங்களாவது ஏதுடா?

                கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

                கோயிலும் மனத்துளே, குளங்களும் மனத்துளே

                ஆவதும் அழிவதும் இல்லை, இல்லை இல்லையே      (சிவவாக்கியர், 34)
 

                சாதி பேதங்கள் சொல்லுகிறீர், தெய்வம்

                தானென் றொருஉடல் பேதமுண்டா?

                ஓதிய பாலதில் ஒன்றாகி யதிலே

                உற்பத்தி நெய்தயிர் மோராச்சு                          (கொங்கணர் 95)
 

திருமூலர் பிற சித்தரைப்போல உடம்பை இழித்துக் கூறவில்லை. மாந்தர் உடம்பே இறைவனைக் காண அடிப்படையாக இருத்தலின் அதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

 

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்;

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே                       (724)

 

உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே                        (725)

 

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;

வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தௌ;ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே;                                              (1823)

 

மனிதனுக்கு அவனது உடம்பைக் கொண்டு செய்ய வேண்டிய ஞானச் செயலைக் கற்பிக்கும் அனுபவப் பேரறிவுப் பெருநூல் சித்தர் இலக்கியம் எனச் சிறப்பித்துப் பாராட்டுவர் மீ.ப. சோமு. மேலும் அவ்விலக்கியங்கள் அறக்கருத்துக்களை வலியுறுத்தும் என்றும் மனமாசின்றிக் காக்கவும் தீமைகளை நீக்கி நன்மைகைளைச் செய்யவும் பல அறச் செய்திகளைக் கூறுகின்றன என்றும்  மனிதனை மனிதனாக்குவதற்கு வேண்டிய மனப் பயிற்சி தந்து அவனை மனிதனாக்கிப் பின் வானவராக உயர்த்தும்உயய நோக்கங்கள் கொண்டவை என்றும் விளக்கியுரைத்துள்ளார்.

 

                சித்தர்கள் வெளியில் சென்று கோயில் வழிபாடு செய்ய விரும்புவதில்லை. புறச் சடங்குகளையும் அவர்கள் ஏற்பதில்லை. மனக் கோயில் வழிபாடே அவர்கட்கு முதன்மையானதாகும். யோகமுறை மூச்சடக்கிப் பயிற்சி செய்தல் ஆகியவற்றையே அவர்தம் நூல்கள் வித்துரைக்கின்றன. மன்பதைக்கு வேண்டிய சீர்திருத்தக் கருத்துக்களும் அவர்களுடைய பாடல்களில் மிகுதியாக உள்ளன.

 

 யாப்பு வகை

 

                சித்தர் இலக்கியங்களுள் சில மரபுச் செய்யுட்களால் அமைந்தவை. சில நாட்டுப்புறப் பாடல்களால் இயன்றவை. எளிய நடையில் உயய கருத்துக்களைப் பொது மக்களுக்காகப் பாடியிருப்பது இச்சித்தர்களின் தனிச் சிறப்பு என்றுகூறலாம். மேலும் அவர்தம் பாடல்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தி வரும் உயிரோட்டம் உடையவை.

 

                சித்தின் பாடல்கள் வெண்பா, அகவற்பா, ஆசிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை, கலிவிருத்தம் முதலான யாப்பு வரையறையோடு இயற்றப்பெற்றவை. தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி வகையைச் சார்ந்த இசைப்பாடல்களாகவும் சில காணப்படுகின்றன.  அவை கும்மி, கண்ணி, ஆனந்தக்களிப்பு, காவடிச்சிந்து, கீர்த்தனை முதலிய நாட்டுப்புற இசைப் பாடல்களாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் இசைப்பாடல்களாக அமைந்திருத்தலால், அவற்றைப் பொது மக்கள் மகிழ்ச்சியோடு தெருக்களில் பாடிச் செல்வதை இன்றும் நாம் காண்கிறோம்.  கேட்போரும் அப்பாடல்களின் பொருளை எளிதில் உணர்ந்து இன்புறுகின்றனர்.

 

                சித்தர்களைப் பற்றிய செய்திகள் தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றில் குறிப்புக்களாகக் காணப்படும் போக்கு சித்தர்கள் என்போர் யாவர் என்பதனைப் பல்வேறு சித்தர் பாடல்களும் விளக்கியிருக்கும் பாங்கு, தாயுமானவர், பாம்பாட்டி சித்தர், இராமலிங்க அடிகளார் முதலானோர் பல்வேறு சித்து விளையாடல்கள் புந்துள்ளமை பற்றிய செய்திகள், சித்தர்கள் தத்தம் பாடல்களில் சமயங்கள் கடந்த எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை நெறிகளையே பாடியிருக்கும் நிலை, பல வகையான யாப்பு வகைகளில் சித்தர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும் பெற்றி முதலானவை இப்பாடத்தில் விளக்கப் பட்டிருத்தலை காணலாம்.

 

பதினெண் சித்தர்கள்

 

பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும் பதினெண்மராகக் காட்டியிருக்கலாம் என்ற செய்தி சித்தர்களின் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே  நிலவும் கருத்து வேறுபாடுகள்சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டிலிருந்து ஐம்பதுவரை எட்டியுள்ள நிலை இவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

சித்தர்களின் எண்ணிக்கை குறித்த அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பதினெட்டு என்னும் எண்ணின்பால் கொண்ட ஈடுபாட்டினால் சித்தர்களையும், பதினெண்மராக அடக்கிக் காட்டுகின்றனர். பதினெண்கணக்குள், பதினெண்கீழ்கணக்கு  பதினெண் மேற்கணக்கு பதினெண் நாள் பாரதப் போர் என்பவனற்றைக் காணுங்கால், அவ்வெண்ணிடம் வைத்த மதிப்பினை உணரலாம்.  தமிழிலுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களோடு சித்தர் எண்ணிக்கையை ஒப்பிட்டு இயையு காண்போரும் உளர்.

 

சிறுபிரபந்த வகைகளை 96 எனக் கூறி அவற்றையெல்லாம் 90க்குள்ளேய அடக்கிக் காட்டுவர். காலப்போக்கில் அவ்விலக்கிய வகை வளர்ந்து. தொண்ணுற்றானும் மிகுந்து ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. அது போலவே, சித்தர்களின் எண்ணிக்கையும் பதினெட்டினைக் கடந்து ஐம்பதினை எட்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியாரும் எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் (1 பாரதி அறுபத்தாறு) எனத் தம்மைச் சித்தராகக் கூறிக் கொள்கிறார்.  இவர் போன்றோரை எல்லாம் சித்தர்களின் பட்டியலில் சேர்த்தால் எண்ணிக்கை ஐம்பதிலும் மேலாகிறது.

 

தஞ்சை சரசுவதி மகால் நூலகப் படத்தில் பதினெண் சித்தர் பெயர்கள் காணப்படுகின்றன.

 

1. திருமூலர்           
2. இராமதேவர்    
3.
கும்பமுனி           
4.
இடைக்காடர்         
5.
தன்வந்தி           
6.
வான்மீகர்               
7.
கமலமுனி          
8. போகர்      
9.
மச்சமுனி           
10.
கொங்கணர்
11.
பதஞ்சலி           
12.
நந்திதேவர்
13.
சட்டைமுனி            
14. சுந்தரானந்தர்       
15.
குதம்பை           
16. கருவூரார்  
17.
கோரக்கர்           
18.
பாம்பாட்டி

 

                அபிதான சித்தாமணியில் காணப்பெறும் பதினெண் சித்தர்களின் பெயர்கள் மேற்காட்டிய பட்டியலினின்றும் வேறுபடுகின்றன.  அவற்றை இங்குக் காணலாம்.

1. அகத்தியர்           
2.
போகர்              
3. கோரக்கர்            
4.
கைலாசநாதர்

5. சட்டைமுனி         

6. திருமூலர்           

7. நந்தி         
8.
கூன்கண்ணர்

9. கொங்கணர்

10. மச்சமுனி          

11. வாசமுனி          

12. கூர்மமுனி

13. கமலமுனி         

14. இடைக்காடர்       

15. புண்ணாக்கீசர்      

16. சுந்தரானந்தர்

17. உரோமமுனி       

18. பிரமமுனி

 

இவர்களேயன்றி வேறு சிலரையும் அபிதான சிந்தாமணி சித்தர்களாகக் குறிப்பிட்டுள்ளது. அவர்கள் தன்வந்தி, புலத்தியர், புசுண்டர், கருவூரார், இராமதேவர், தேரையர், கபிலர் போன்றோராவர். கலைக்களஞ்சியம் குறிப்பிடும் பதினெண் சித்தர்களும் அபிதான சிந்தாமணியால் சுட்டப் பெற்றவர்களே.  சிலர் சித்தர்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என்பர்.  அவர்கள் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் 21 சித்தர்கள் தவம் சித்திக்கப் பட்டிருத்தலைச் சான்றாக எடுத்துக் காட்டுவர். 

 

                நம் நாட்டுச் சித்தர்கள் என்னும் நூலை எழுதிய முனைவர் இரா. இராசமாணிக்கம் சித்தர்களின் பெயர்களை அகர வசைப்படுத்திப் பின் வருமாறு 25 என்ற எண்ணிக்கையில் காட்டியுள்ளார்.

1. அகத்தியர்           
2.
அகப்பேய்                    

3. அழுகணிச் சித்தர்

4. இடைக்காடர்

5. இராமதேவர்      

6. இராமலிங்கர்

7. உரோமமுனி        

8. கபிலர்                       

9. கருவூரார்

10. காகபுசுண்டர்

11. குதம்பைச் சித்தர்           

12. கொங்கணர்

13. கோரக்கர்           

14. சட்டைமுனி                

15. சிவவாக்கியர்

16. தன்வந்தி           

17. திருமாளிகைத்தேவர்       

18. திருமூலர்

19. தேரையர்           

20. நந்தி                

21. பாம்பாட்டி

22.புலத்தியர்           

23. புலிப்பாணி         

24. போகர்

25. மச்சமுனி சித்தர்

 

                சித்தர் பாடல்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற திருமதி இளமதி தன் ஆய்வேட்டின் பின்னிணைப்பில் 47 சித்தர்கள் பெயர்களைத் தொகுத்துத் தந்துள்ளார். அவை.

 

அகத்தியர்  அகப்பேய்  அமலுமுனி அழுகண்ணர்
ஆனந்தர் இராமதேவர்     இடைக்காடர்

உரோமமுனி

கமலமுனி கருவூரார்  காகபுசுண்டர் காலாங்கி
குதம்பை கூர்மமுனி  கூன்கண்ணர்  கைலாசநாதர்
கொங்கணர் கோரக்கர் சட்டைமுனி சண்டிகேசர்
சனகர் சனந்தனர் சனற்குமாரர் சனாதனர்
சாகமமுனி சிவவாக்கியர் சுந்தரானந்தர் சூதுமுனி
தன்வந்தி திருமூலர் தேரையர் நந்தீசர்
பதஞ்சலி பாம்பாட்டி பிரம்மமுனி புண்ணாக்கீசர்
புலத்தியர் புலிப்பாணி  பூணைக்கண்ணர்  போகர்
போககுரு மச்சமுனி யூகிமுனி வாசமுனி
 வான்மீகி வியாசர்    

  

                சித்தர் இலக்கியம் என்னும் நூலில் மீ,ப. சோமு மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் அன்றி, ஒளவையார், மாணிக்கவாசகர், திருமாளிகைத் தேவர், சேந்தனார், காரைக்காலம்மையார் பட்டினத்தார் ஆகியோரையும் சித்தர் கூட்டத்தில் அடங்கியுள்ளார். மாணிக்கவாசகன் சிவபுராணம், கீர்த்தித்திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் என்பனவற்றையும் ஒளவையான் குறள், விநாயகர் அகவல் ஆகியனவற்றையும் ஒன்பதாம் திருமறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருபூர்த் தேவர் ஆகியோர் பாடல்களையும் பதினோராம் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார், பட்டினத்தார் பாடல்களையும் சித்தர் இலக்கியங்கள் எனக் குறிப்பிட்டு அவற்றுக்கு விளக்கமும் எழுதியுள்ளார்.

 

                சித்தர் பாடல்கள் தொகுக்கப்பெற்று வெளிவந்துள்ள சித்தர் ஞானக் கோவையில் ஒளவையான் குறள், விநாயகர் அகவல், மாணிக்கவாசகன் சிவபுராணம் முதலிய பகுதிகளும் ஒன்பதாம் திருமுறையிலுள்ள திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர் ஆகியோருடைய பாடல்களும் பதினோராந் திருமுறையிலுள்ள காரைக்காலம்மையார் பாடல்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

                சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் இந்நூலில் மீ.ப . சோமு அவர்கள் தம் சித்தர் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ஒளவையின் குறள், விநாயகர் அகவல், திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், காரைக்காலம்மையார் ஆகியேன் பாடல்கள் இடம் பெறுகின்றன.  மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம். கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல் ஆகியவை இடம் பெறவில்லை.  சித்தர் ஞானக்கோவையில் இடம்பெறும் குறள் ஒப்புமை காணப்படும் எல்லா நூல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.  சிவயோக சாரம், திருவள்ளுவர் ஞானம், நந்தீஸ்வரர் பூஜாவிதி, இராம தேவர் பூஜாவிதி, உரோமஷி ஞானம், ஞானசர நூல், நிஜானந்த போதம், ஞான ஏற்றம், சூயானந்தர் சூத்திரம் என்னும் நூல்களில் குறளாட்சி காணப்பெறாமையின் அவை இந்நூலில் இடம் பெறவில்லை.

 

                இந்நூலில் இடம்பெறும் சித்தர்களையும் நூல்களையும் இங்குக் காணலாம்.  சித்தர்களுள் திருமூலர் தலையாயவராக இருத்தலின் அவர் முதலில் இடம் பெறுவர்.

1.             திருமூலர்

2.             ஒளவையார்

3.             திருமாளிகைத் தேவர்

4.             கருவூர்த்தேவர்

5.             காரைக்காலம்மையார்

6.             பட்டினத்தடிகள்

7.             பத்திரகியார்

8.             சிவவாக்கியர்

9.             பாம்பாட்டி சித்தர்

10.           இடைக்காட்டுச் சித்தர்

11.           அகப்பேய்ச் சித்தர்

12.           குதம்பைச் சித்தர்

13.           கருவெளிச் சித்தர்

14.           அழுகணிச் சித்தர்

15.           கொங்கண நாயனார் (வாலைக்கும்மி)

16.           சிவானந்தபோதம்

17.           நெஞ்சறி விளக்கம்

18.           ஞானக்கும்மி

19.           திருவருட்பா திரட்டு

20.           சிவபோக சாரம்

21.           சொக்கநாத வெண்பா

22.           சட்டைமுனி ஞானம்

23.           அகஸ்தியர் ஞானம்

24.           வால்மீகர் சூத்திர ஞானம்

25.           காகபுசுண்டார்.

 

தஞ்சை சரசுவதிமகால் நூலகப் படத்தில் காணப்படும் பதினெண் சித்தர்களின்றும் அபிதான சிந்தாணியில் குறிப்பிட்டிருக்கும் பதினெண் சித்தர்களின் பெயர்கள் வேறுபட்டிருக்கும் விதம்.  முனைவர் இரா. இராசமாணிக்கம் சித்தர்களின் எண்ணிக்கையை 25 ஆகக் குறிப்பிட்டுள்ளமை. திருமதி இளமதி அவர்கள் சித்தர்களின் எண்ணிக்கையைத் தம் ஆய்வேட்டில் 47 எனச் சுட்டியிருப்பது.  மேற்காட்டியவர்களோடு  மீ.ப. சோமு அவர்கள் மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார் போன்றவர்களையும் சித்தர்கள் பட்டியலில் அடக்கிக் காட்டியிருப்பது பற்றிய விளக்கங்கள் அறியப்பெற்றோம்.

       
1
 

நூலாசியர் பற்றி...

                "சித்தர் இலக்கியங்களில் திருக்குறள்" என்னும் இந்நூலின் ஆசியர் பேராசியர் முனைவர் இரா. சாரங்கபாணி அவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சார்ந்த தேவன்குடியில் 18-09-1925ல் பிறந்தவர்.

                அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.லிட்,. பிச்.டி, பட்டமும் பெற்றவர்கள்.

                அழகப்பா கல்லூத் தமிழ்த்துறையில் பணியில் சேர்ந்து முப்பத்திரண்டு  ஆண்டுகள் அங்கேயே தொடர்ந்து பேராசியராய், தமிழ்த்துறைத் தலைவராய், உயர் ஆராய்ச்சி மைய நெறியாளராய்ப் பணியாற்றிய பெருந்தகையாளர்.

                தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத் துறையில் பணியாற்றியபொழுது இலக்கியப் பொருட்களஞ்சியம் இரு தொகுதிகள் வெளிவரக் காரணமாய் இருந்தவர்.

                அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் சிறப்பு நிலைப் பேராசியராகப் பணியாற்றிய காலை சிறப்பான முறையில் எழுதியதே சித்தர் இலக்கியங்களில் திருக்குறள் என்னும் இவ் ஆய்வு நூல், திருக்குறளின் மீது இவருக்குள்ள ஈடுபாடு இந்நூலின் வழி புலனாகும். மேலும் திருக்குறள் உரை வேற்றுமையை விவுபடுத்தி முப்பாலுக்கும் மூன்று தொகுதிகள் எழுதித் தனித்தனியே வெளியிட்டுள்ளார்கள். 

                இவர்தம் இத் திருக்குறட்பணியைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு சுதந்திரப் பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


சாப்ட்வேர்கள் Online வழியாக 30 நிமிடங்களில் DOWNLOAD செய்து பயன் படுத்தலாம்.WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 5/4/2024 7:03:55 PM